ஸ்ரீவேதவ்யாசரால் இயற்றப்பட்ட பதினெட்டு புராணங்களுக்குள் உத்தமமான ஸாத்விக புராணம் ஸ்ரீகருடபுராணம். உலகில் உயிரினங்களுக்கு பிறப்பும் இறப்பும் எக்காரணத்தால் உண்டாகின்றன? ஜநநம் எடுத்து பூமியிலே வாழ்ந்து வளர்ந்து மரணமடைந்த பிறகு எந்தச் செய்கையால் சுவர்கமும் நரகமும் நேரிடுகிறது? எந்த காரணத்தால் தீராத நோய்கள் ஏற்படுகிறது? எதனால் ப்ரேத ஜந்மா நீங்குகிறது. எதனால் முக்தி கிடைக்கிறது? நரகம் என்பது யாது? எத்தனை வகைப்படும்? என்ன பாவத்திற்கு என்ன என்ன தண்டனைகள்? வாழ்விற்கு அப்பால் ஜீவன் செல்லும் வழி வகைகளை அறிவது எப்படி? இது போன்ற அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கும் உன்னதமான நூல் ஸ்ரீகருடபுராணம். திருமால் கருடனுக்குச் சொன்ன இந்த கருட புராணத்தைக்கேட்டு நாமும் தீவினை மார்கத்தைக் கைவிட்டு திருமால் தி-ருவடி சேருவோம் வாரீர்.
பொலிக! பொலிக! பொலிக!