BHAGAVADGITA

700.00

ஸ்ரீபகவத்கீதை
சேயன் அணியன் சிறியன் மிகப்பெரியன்
ஆயன் துவரைக்கோனாய் நின்ற மாயன்
அன்றோதிய வாக்கதனைக் கல்லார் – உலகத்தில்
எதிலராம் மெய்ஞானமில்.

திருமால் உலகை ரக்ஷிக்க எடுத்த அவதாரங்களுள் மிக முக்யமானது ஸ்ரீக்ருஷ்ணாவதாரம். கண்ணன் செய்த செயல்களுள் முக்யமானது பகவத் கீதையை அர்ஜுனனுக்கு உபதேண்த்தது. அர்ஜுனனை நிமித்தமாகக் கொண்டு நமக்கு முக்தி ஸாதனமான உபதேசத்தைச் செய்தான். மதிகலங்கிய அர்ஜுனன் கீதையைக் கேட்டே தெளிவு பெற்றான். 700 ச்லோகங்களோடே 18 அத்யாயங்களுடன் கூடியிருக்கும் இந்த பகவத் கீதையே மஹாபாரத்தின் ஸாரம். பகவத் ராமாநுஜர் இக்கீதை முழுவதிற்கும் ஒரு சீரிய உரை இயற்றியுள்ளார். அக்கீதாபாஷ்யத்தின் துணை கொண்டு ஒவ்வொரு ச்லோகம் ச்லோகமாக அனைவரும் புரிந்துகொள்ளும்படி விளக்கியுள்ளார் நம் ஸ்வாமி. நாமும் இதனைக் கேட்டு கீதாசார்யன் அருள் பெறுவோம். வாரீர்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “BHAGAVADGITA”

Your email address will not be published. Required fields are marked *